Thursday 2nd of May 2024 03:55:25 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்!


தமிழகத்தின் 23-ஆவது முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் சற்று முன்னர் பதவியேற்றார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் ஸ்டாலின் பதவியேற்று, இரகசிய காப்பு பிரமாணம் செய்துகொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு நடந்துவருகிறது. கோவிட் 19 தொற்று நோய் காரணமாக குறைந்தளவானோருடன் மிக எளிமையாக பதவியேற்பு விழா நடைபெற்றது. .

அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றார்

காங்கிரஸ் சார்பில், கே.எஸ் அழகிரி, திருநாவுக்கரசர், மதிமுக சார்பில் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் பதவியேற்று நிகழ்வில் பங்கேற்றார்.

முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து இன்று மாலை ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோனை நடத்தி, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரியவருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE